ஒரு நுரையீரல்! கொரோனாவில் இருந்து மீண்ட 75 வயது முதியவர்!

புற்று நோய்க்கு எதிராக போராடிய 75 வயது முதியவர், தற்போது ஒரு நுரையீரலுடன் கொரோனாவையும் போராடி வென்றுள்ளதால், நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதற்கு எடுத்துகாட்டாய் மாறியுள்ளார்.

கொரோனா வைரஸ் வந்துவிட்டால், உயிரிழந்துவிடுவோம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படியில்லை, நம்பிக்கையுடன் அந்த வைரசுடன் நாம் போராடினால், விரைவில் குணமடைந்துவிடலாம் என்று அதில் இருந்து மீண்ட பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அதே போன்று ஸ்காட்லாந்தை சேர்ந்த William Burns என்ற 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு முறை புற்று நோயால் பாதிக்கப்பட்டு தப்பிய இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு ஒரு நுரையீரலை இழந்தார்.

இதையடுத்து கடும் சுவாசப் பிரச்சனையுடன், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நான்கு வாரங்களுக்கு பின் Ayrshire-ல் இருக்கும் Crosshouse மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் என் மனைவியோ, மகன்களோ இல்லாமல் தனியாக இந்த நோயிடம் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் நான் இதை ஒரு அதிசயம் என்றே சொல்வேன், நேர்மறையான கண்ணோட்டமும், நம்பிக்கையும் இருந்ததால் தான் என்னால் இதில் இருந்து மீள முடிந்தது.

ஆனால், இது மிகவும் மோசமாக இருந்தாக கூறியுள்ளார். William Burns-க்கு Ruby Ivy(54) என்ற மனைவியும், ஐந்து மகன்களும் உள்ளனர்

இதில் அவரை அழைத்து செல்ல வந்த மகன் Stewart கூறுகையில், அவர் சிகிச்சை பெற்று வரும் போது எந்த ஒரு தொடர்பும் இல்லாதது பயங்கரமானதாக இருந்தது.

இருப்பினும், தொலைப்பேசியில் பேசிக் கொள்வது, வீடியோ கால் மூலம் பேசிக் கொள்வதுமாக இருந்ததாக கூறினார்.

மனைவி Ruby Ivy, தன்னுடைய கணவனை ஒரு போராளி என்று கூறினார்.