விஜய் ரசிகர் ரஜினி ரசிகரால் அடித்து கொலை..!!

ரஜினி, விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இதில் இருவருமே கொரொனாவிற்காக நிறைய நிதியுதவி செய்துள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் ரஜினி அதிகம் நிதி கொடுத்தாரா இல்லை விஜய் அதிகம் நிதி கொடுத்தாரா என்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில வாக்குவாதம் முற்ற, ரஜினி ரசிகர் விஜய் ரசிகரை தலையில் ஓங்கி அடித்து கீழே தள்ளியுள்ளார்.

அப்போது விஜய் ரசிகர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது அந்த பகுதி மக்களை கடும் அதிர்ச்சி ஆக்கி உள்ளது.