அருண் விஜய் நடித்த குற்றம் 23 படத்தில் நடித்தவர் மகிமா நம்பியார். புரியாத புதிர், கொடி வீரன், மகாமுனி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஊரடங்கால் இவரும் வீட்டிலேயே இருக்கிறார். மேலும் வீட்டில் ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.
அதே வேளையில் அவருக்கு இன்சோம்னியா என சொல்லப்படும் தூக்கமின்மை வியாதி இருக்கிறதாம். இதனால் அவர் அவதிப்படுகிறாராம்.
இதிலிருந்து மீண்டு வருவதற்காக அவர் 6 வகையான முக்கிய யோகாசனங்களை செய்து வருவதாக இன்ஸ்டாகிராமில் நடித்து வருகிறாராம்.







