நாணயப் பரிமாற்றத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் சீனா

கொரோனா வைரஸின் தோற்றுவாயாக கருதப்படும் சீனா தற்போது பின்னடைவுகளிலிருந்து மிக வேகமாக மீண்டு வருகின்றது.

அத்துடன் சீனாவிற்கு வெளியே உள்ள மிகப்பிரபலமான நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றது.

இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தினை அறிமுகம் செய்வது தொடர்பில் சீனாவின் மத்திய வங்கி ஆராய்ந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்படாத கிரிப்டோ கரன்ஸி புழக்கத்தில் இருந்துள்ள நிலையில் உலக நாடுகளில் அது பின்னர் தடை செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சில நாடுகளை இணைத்துக்கொண்டு பேஸ்புக் நிறுவனம் Libra எனப்படும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.

எனினும் இத் திட்டமும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் தற்போது சீனா முழு மூச்சாக டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தினை அறிமுகம் செய்வதில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.