அமேஷானின் அலெக்ஸா சாதனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்

அமேஷான் நிறுவனம் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ள அலெக்ஸா சாதனமானது பல்வேறு வழிகளில் அதன் பாவனையாளர்களுக்கு உதவி செய்து வருகின்றது.

இதன்படி இணைய இணைப்பு உள்ள நிலையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில்களை உடனுக்கு உடன் வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது உலக அளவில் பேசுபொருளாக இருக்கும் கொவிட்-19 தொடர்பான கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கொவிட்-19 தொடர்பான பயனர்களின் அடிப்படைக் கேள்விகளுக்கு மாத்திரம் பதில் வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த தகவலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமேஷான் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.