கணவரின் பெயரை அசிங்கப்படுத்தி விருதுவிழாவில் சர்ச்சையாக பேசிய நடிகை ஜோதிகா….

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. வாளி படத்தின் சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம் மாடலிங்கிலிருந்து நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விகரம் ஆகியோர் படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் 2006ல் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து சிவகுமாரின் மருமகளானார். அதன்பி இரு ஆண் பெண் பிள்ளைகளை பெற்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல விருதுவிழாவான JFW Award 2020 சமீபத்தில் நடைபெற்றது. சிறந்த நடிகையாக ராட்சசி படத்திற்காக விருதினை நடிகை சிம்ரன் கையில் வாங்கினார்.

வாங்கியதும் சில கருத்துக்களை கூறிய ஜோதிகா, தஞ்சைபெரிய கோயில் கட்டுவதை பற்றி சர்ச்சையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்காக உண்டியலில் காசு போடக்கூடாது என்றும், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக அதனை பயன்படுத்துங்கள் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் சூர்யா எந்த மேடையிலும் சர்ச்சையாக பேசி மற்றவர்களை காயப்படுத்தாத நிலையில் ஜோதிகா பேசியது பேசியதற்கு எதிராக விமர்சித்து வருகிறார்கள். வெறும் நடிகையாக இருப்பதால் சமுக அக்கறையாக பேசிவது நியாயம் என்று நினைக்காதீர்கள் என்றும், உங்களின் மேக்கப்பிற்கும், படத்தின் செலவிற்கும் ஆகும் செலவு இதைவிட அதிகம்தான் என்று கடுமையாக விமர்சித்து திட்டித்தீர்த்து வருகிறார்கள்.