தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், மேலும் பைக் ஸ்டண்ட் என்றாலே தல அஜித்தின் பெயர் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும்.
அந்த வகையில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
ஹைதெராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு படக்குழுவினர்கள் அனைவரையும் விமானத்தில் அனுப்பிவிட்டு, இவர் மட்டும் பைக்கில் ஹைதெராபாத்திலிருந்து சென்னைக்கு 650கீமி பைக்கில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த செய்தி தல அஜித்தின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதோடு வலிமை படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.
அதை யுவன் முடித்து படக்குழுவிடம் கொடுத்துவிட்டதாகவும் தெரிகிறது.







