தாய் கண்முன்னே தலைதுண்டித்து உயிரிழந்த இளம்பெண்..!!

உதகையில் கேரட் கழுவும் இயந்திரத்தில் இளம்பெண் ஒருவர் தலை சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கேத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் கேரட், கிழங்கு, முட்டை கோஸ் ஆகிய காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

கேத்தி பாலாடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ளன. இங்கு கேரட் கழுவி சென்னை, பெங்களூரு உட்பட பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக சுப்பிரமணி, சுமித்ரா தம்பதிகள், இவர்களது மகன்கள் மணிகண்டன் (22), அருண் (15) என்பவர்களுடன் மகள் நந்தினி(18) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

கேரட் கழுவும் பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கேரட் கழுவும் இயந்திரத்தில், நந்தினி (18) என்ற பெண் கேரட் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நந்தினியின் தலைமுடி மற்றும் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால், அவர் மீள முடியாமல் தவித்துள்ளார்.

பிற பணியாளர்கள் சுதாரிக்கும் முன்பு, தாயின் கண்முன்னே நந்தினி தலை துண்டித்து, தலை மற்றும் உடல் தனித்தனியாக இரண்டு துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விபத்து குறித்து கேத்தி பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.