மாதவிடாய் காலத்தில் அவஸ்தையா?

மாதவிடாய் காலங்களில் அவஸ்தைப்படும் பெண்கள் என்ன சாப்பிடலாம் என்பது குறித்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

  • தினம் காலையும் இரவும் ஒரு டம்ளர் பால் தவிர்க்காமல் குடியுங்கள். மிதமான சூட்டில் நாட்டுசர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
  • அடி வயிற்று வலியால் அவதிப்படுபவார்கள் சாதத்துடன் கெட்டித்தயிர் அல்லது இரண்டு கப் தயிரை தினமும் எடுத்துகொள்வதன் மூலம் கால்சியம் இழப்பு நேராமல் தடுக்கலாம்.
  • இரவு ஒரு கைப்பிடி பாதாமை ஊறவைத்து மறுநாள் தோல் உரித்து சாப்பிடலாம். நாள் முழுக்க உடல் சோர்வில்லாமல் இருக்கலாம்.
  • பேரீச்சம்பழம் சாப்பிடலாம். காலை, இரவு என்று பிரித்து வேளைக்கு 3 அல்லது 4 பழங்கள் வரை சாப்பிடலாம்.
  • பழங்களில் மாதுளையை சாறு பிழிந்து குடிக்கலாம். வேளைக்கு ஒரு பழம் என்று உலர் அத்திபழம் சாப்பிடலாம். பெண்கள் இந்த நாளில் கொய்யாபழத்தை சாப்பிடுவதும் நல்லது.
  • மாதவிடாய் நாள்களில் வாழைப்பூ, வாழைத்தண்டு, பீன்ஸ், முளைகட்டிய தானியங்களை எடுத்துகொள்ளலாம்.
  • மிதமான வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
  • தண்ணீர் குடிக்க வேண்டும். இயன்றவரை நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துகொள்வதும் நல்லது.