தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

நமது தமிழ் மாதத்தில் முதல் மாதமாக சித்திரை இருக்கிறது. சித்திரை மாதத்தின் துவக்கமே, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில நாள்காட்டியின் படி ஜனவரி பிப்ரவரி என 12 மாதம் இருக்கிறது. இதனைப்போன்று தமிழ் நாள்காட்டியிலும் 12 மாதங்கள் இருக்கிறது.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்கள் இருக்கிறது. தமிழர்கள் சகல விஞ்ஞானத்திலும் சிறந்து விலங்கியர்வர்கள் என்பது உலகறிந்த விஷயம். தமிழ் புத்தாண்டிற்கு பல நபர்கள் தொடர்ந்து வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் ” என்று கூறியுள்ளார்.

இதனைப்போன்று, இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.. இந்த விழாக்கள் அனைத்தும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தட்டும். மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும். கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து வெளியேற, அனைவரும் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.