வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷணு விஷால். அதன் பின் இவருக்கு தொடர்ந்து படங்கள் வந்தாலும் ராட்சஸன் படம் மிகவும் கைகொடுத்தது.
அடுத்ததாக அவரின் FIR படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அவர் கடந்த 2011 ல் நடிகர் நட்டி நட்ராஜின் மகளான ரஜினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2017 ல் இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. பின் 2018 ல் அவர் ரஜினியை பிரிந்து விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது.
பின் அவர் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டவை காதலிப்பதாக சொல்லப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.
அதே வேளையில் ஜூவாலா கட்ட பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தை திருமணம் செய்து 2011 ல் விவாகரத்து செய்தார்.
விஷ்ணு ரஜினியை பிரிந்ததற்கு ஜூவாலா கட்டவும், நடிகை அமலா பாலும் தான் காரணம் என சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் விஷ்ணு மனைவியை பிரிந்த பின் ஜூவாலா கட்டாவை சந்தித்தே. நிறைய நேரம் அவருடன் தான் செலவிட தொடங்கினேன். ஜூவாலா நேர்மறை எண்ணங்கள் கொண்டவர். எனவே ஜூவாலாவை பிடிக்கும்.
அவரும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் பிரிவை சந்தித்துள்ளார். நாங்கள் இருவரும் மனம்விட்டு நிறைய விசயங்கள் பேசியுள்ளோம்.
உறவு நல்ல முறையில் தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
ஜூவாலா கட்டாவால் தான் மனைவியை பிரிந்ததாக சிலர் சமூகவலைதளங்களில் கூறினார்கள். அதே போல ராட்சஸன் படத்தின் போது அமலா பாலை காதலிக்கிறேன் என கூறினார்கள். அவர்களின் விமர்சனங்களை தவறாக எண்ணவில்லை. இது என்னுடைய சொந்த வாழ்க்கை என கூறியுள்ளார்.







