கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் சுமார் 11,000 முதல் 22,000 பேர் வரை இறக்கலாம் என்று அரசு கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரை கொடிய நோயான கொரோனா வைரஸால், கனடாவில் தற்போது வரை மட்டுமே 19,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 462 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கனடா அரசு, இந்த கொரோனா நோய் காரணமாக நாட்டில் 11,000 முதல் 22,000 பேர் வரை கொல்லப்படக்கூடும் என்று கணித்துள்ளது.
தொற்றுநோய் முடிவடையும் நேரத்தில் நாட்டில் 934,000 முதல் 1.9 மில்லியன் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டதை காணலாம் என்று கனேடியர்கள் கருதுகின்றனர்.
இதனால் அடுத்த சில மாதங்களில் கனேடியர்கள் கடுமையான சமூக விலகல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பர். கனடாவில் தொற்று நோயால் ஏற்படக் கூடிய எண்ணிக்கை குறித்து அரசின் முதல் கணிப்பு இது என்று கூறப்படுகிறது.
அதே சமயம் வியாழக்கிழமை காலை நிலவரப்படி இந்த வைரஸ் காரணமாக 476 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண அதிகாரிகள் அளித்த புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.