நடிகர் தனுஷ் தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் – பிரபல இசையமைப்பாளர்..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் இணைய உள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பா. பாண்டி திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை பாராட்டி பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஷான் ரோல்டன் “வருடம் தோறும் பல திரைப்படங்கள் வெளியாகலாம், ஆனால் அவை அனைத்தும் பா. பாண்டி போல் இருப்பதில்லை, ஒரு இயக்குனராக, நல்ல அர்த்தமான பொழுபோக்கு நிறைந்த தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை தனுஷ் வடிவமைப்பர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், நடிகர் தனுஷ் உடன் இசைமைப்பாளர் ஷான் ரோல்டன் பா. பாண்டி மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.