அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா..

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழப்பு 88 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,405 ஆக அதிகரித்துள்ளது.

209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,13,243 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 4.30 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் – 1,48,220, இத்தாலி – 1,39,422, ஜெர்மனி – 1,13,296, பிரான்ஸ் – 1,12,950, சீனா – 81,802, ஈரான் – 64,586, பிரிட்டன் – 60,733 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.