ஒலிம்பிக் தீபம் போல மெழுகுவர்த்தியை ஏந்திய நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அவரின் இல்லத்திற்கு வெளியே மெழுகுவர்த்தி ஒன்றை ஒலிம்பிக் தீபம் போல கையில் ஏந்தியபடி வருகை தந்தார்.

அவர் வெளியே வந்ததும் ஊடகத்தினர் அதைப் புகைப்படமாக எடுத்தனர்.

வேட்டி மற்றும் பைஜாமா மாதிரியான ஒரு சட்டை அணிந்தபடி ரஜினி வருகை தந்தார்.

தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தபடி மெழுகுவர்த்தியை ஏந்தி அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.