கொரோனா வைரஸ்களில் வெவ்வேறு வகைகள் காணப்படுகின்றன.
எனினும் புதிய கொரோனா வைரஸ் ஆன COVID-19 உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகின்றது.
இவை மிகவும் வேகமாக பரவி வருகின்றமையினால் இது தொடர்பில் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த வரிசையில் கழிவு நீர்களின் மூலம் குறித்த வைரஸ் ஆனது வேகமாக பரவுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வு செய்ய புதிய பரிசோதனை ஒன்றினை விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.
ஏற்கணவே கழிவு நீரில் SARS-CoV-2 வைரசின் பரவலை கண்டறிய தாளினை அடிப்படையாகக் கொண்ட சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது கழிவு நீரில் பரம்பியுள்ள பரம்பரை அலகு பதார்த்தங்களை கண்டறியும் புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Cranfield பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதனை உருவாக்கியுள்ளது.
இதன் விலையானது 1 பவுண்ட்டிலும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.