இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு சென்ற தமிழகம்.. ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு..

உலகையே நடுநடுங்க வைத்துகொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, தற்போது இந்தியாவில், 1,397 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆக இருந்த பாதிப்பு மாலையில் 67 ஆக உயர்ந்தது, தற்போது பாதிக்கப்பட்ட 57 பேரில் 22 பேர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூத்துக்குடியில் ஒருவருக்கும், நாமக்கல்லை சேர்ந்தவர்கள் 18 பேர் என்றும், கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் 4 பேரும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 616 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படாததால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் அறியப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவில் வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

முதலிடத்தில் கேரளாவும் (234 பேர்), 2வது இடத்தில் மஹாராஷ்டிராவும் (216 பேர்) உள்ளது. டெல்லி, கர்நாடகா மாநிலங்களைவிட பின்தங்கி இருந்த தமிழகம் இன்று நாளில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.