அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைக்க சமூக இடைவெளியை ஊக்குவிக்கும் ஹேம்..!!

அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைக்க சமூக இடைவெளியினை (Social Distance) பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுவருகின்றது.

எனினும் பல நாடுகளில் மக்கள் இதனைக் கருத்திற்கொள்வதாக இல்லை.

இதனால் கொரோனா வைரஸ் மேலும் இலகுவாக மக்களிடையே பரவி தாக்கத்தை அதிகரித்து வருகின்றது.

எனவே இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Minecraft Earth ஹேமில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது தற்போதைய நிலையில் சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் என்பவற்றின் வழிகாட்டுதலுடன் இவ் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.