சிறிலங்கன் விமானசேவையில் பணிபுரியும் யுவதியொருவருக்கும் கொரோனா தொற்று

26 வயதான இந்த யுவதி தற்போது கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நெருக்கமான செயற்பட்ட மேலும் இரண்டு விமானப் பணியாளர்களான யுவதிகள், கொரோனா தொற்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான பரிசோதனை இடம்பெற்று வருகிறது.

கடந்த 21ம் திகதி UL 503 இலக்க விமானத்தில் இங்கிலாந்து சென்று, மீண்டும் 23ம் திகதி இந்த யுவதி நாடு திரும்பியிருந்தார்.

இந்த விமானப் பயணத்தில் அவருடன் பணியாற்றிய பணியாளர்களை தனிமைப்படுத்தியுள்ளதாக சிறிலங்கள் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.