ஹண்டா வைரஸ் என்பது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன?

கொரோனாவை தொடர்ந்து அடுத்து சீனாவால் அதிகம் பேசப்படும் ஒரு நோயா ஹண்டா வைரஸ் மாறி வருகின்றது.

இது அமெரிக்காவில் ஹண்டா வைரஸ்கள் “New World” ஹண்டா வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஹண்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறியை ஏற்படுத்தக்கூடும்.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், இது “Old World” என்ற பெயரில் அறியப்படுகிறது. இது சிறுநீரக நோய்க்குறியுடன் இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும்.

அந்தவகையில் ஹண்டா வைரஸ் என்பது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை எப்படி தடுப்பது? இதற்கான சிகிச்சைகள் என்ன? என்பது பற்றி விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.

ஹண்டா வைரஸ் என்றால் என்ன?

வைரஸ்களின் ஒரு குடும்பம் தான் ஹண்டா வைரஸ். இவை கொறித்துண்ணிகளான எலிகளால் பரவுகின்றன.

இந்த வைரஸ்கள் மக்களில் பல நோய்க்குறிகளை உண்டாக்கும். இது ஹண்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறி (HPS), சிறுநீரக நோய்க்குறியுடன் ரத்தக்கசிவு காய்ச்சலை (HFRS) ஏற்படுத்தும்.

எவ்வாறு பரவும்?

இது வைரஸ் தொற்று ஏற்பட்ட எலியின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர்/எச்சிலை தொடர்பு கொள்ளும் போது மட்டுமே மக்களுக்கு பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

மிகவும் அரிதான சந்தர்பங்களில் பாதிக்கப்பட்ட எலி கடித்தால் வரும்.

எத்தனை நாட்களில் அறிகுறி வெளிப்படும்?

வைரஸ் தாக்கிய 1 முதல் 8 வாரங்களுக்குள் இதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுமா?

HPS ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாது. அதே சமயம் HFRS மக்களிடையே பரவுவது என்பது மிகவும் அரிதானது.

வேறு எவ்வாறு பரவ கூடும்?

தும்மும் போதும் இருமும் போதும் நீர்துளிகள் மனிதர் மீது படும் போது இத்தகைய நோய் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட மனிதர்களிடமோ அல்லது பகுதிகளிலோ மனிதர்களின் தொடர்பு சிறிதளவு இருந்தால் கூட இந்த வைரஸ் எளிதில் பரவக் கூடும்.

ஆரம்ப அறிகுறிகள்
  • சோர்வு
  • காய்ச்சல்
  • தலைவலி
  • தலைச்சுற்றல்
  • குளிர் காய்ச்சல்
  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுப் போக்கு
  • அடிவயிற்று வலி
  • தசை வலி
  • தொடை, இடுப்பு, முதுகு,வலி
  • சில சமயங்களில் தோள்பட்டை வலி ஏற்படும்
தாமதமாக வெளிப்படும் அறிகுறிகள்?
  • இருமல்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • நெஞ்சு பகுதியில் ஒருவித இறுக்கமான உணர்வு
என்ன ஆபத்தை ஏற்படுத்தும்?
  • தாழ் இரத்த அழுத்தம்
  • கடுமையான அதிர்ச்சி
  • வாஸ்குலர் கசிவு
  • கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்
கண்டறிவது எப்படி?
  • HFRS கண்டறியப்படுவதை உறுதிப்படுத்த பல ஆய்வக சோதனைகள் (இரத்த பரிசோதனை, அடிப்படை வளர்சிதை மாற்ற பேனல்கள் போன்றவை) பயன்படுத்தப்படுகின்றன.
  • HPS கண்டறிய ஒருவருக்கு காய்ச்சல், தசை வலியுடன், எலி கடித்த அனுபவத்தையும் கொண்டு மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்தால், அது ஹண்டா வைரஸ் நோயைக் குறிக்கும்.
சிகிச்சைகள் என்ன?

இந்த வைரஸிற்கு குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.

இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர்கள் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவத்தைப் பெற்றால், மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பாதிக்கப்பட்ட நபர்கள் சந்திக்கும் கடுமையான சுவாசக் கோளாறுகளை நிர்வகிக்க ICU-வில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். இந்நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதே நல்லது.

தடுப்பது எப்படி?
  • எலி சிறுநீர், மலம் கழிக்கும் இடங்களில் இருந்து விலகி இருக்கவும்.
  • வீட்டில் எலி வரும் ஓட்டைகளை அடைக்கவும்.
  • வீட்டின் வெளியே உணவுகளை வைப்பதைத் தவிர்க்கவும்.
  • எலியின் கழிவுகள் இருக்கும் பகுதிகளில் கிருமிநாசிகளைத் தெளித்துவிடவும்.