எனது 19 மாத செல்ல மகளுக்கு கொரோனாவா?கண்ணீர் சிந்தும் பிரித்தானிய தாயார்

பிரித்தானியாவில் கடுமையான காய்ச்சலால் அவதிக்குள்ளாகி இருக்கும் 19 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என்பது தொடர்பில் அதன் தாயார் குடியிருப்புக்கும் மருத்துவமனைக்கும் இடையே அலைந்து வருகிறார்.

ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியில் குடியிருக்கும் Hannah Payne என்ற தாயார், வெறும் 19 மாதமேயான எனது செல்ல மகளுக்கு கொரோனாவா என தாங்க முடியாத அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு சரிவு காரணமாக அவதிப்பட்டுவரும் குழந்தை ஈவ்லின் தற்போது கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வார துவக்கத்தில் இருந்தே குழந்தை ஈவ்லின் காய்ச்சலில் சிக்கியதும் மொத்த குடும்பமும் ஆடிப்போயுள்ளது.

புதன் அன்றுவரை குழந்தை ஈவ்லினை நான்கு முறை மருத்துவமனைக்கு இட்டுச்சென்றுள்ளனர். திடீரென்று ஆக்சிஜன் அளவு ஆபத்தான நிலையில் சரிவடைந்ததை அடுத்து அன்று இரவு மருத்துவமனையில் தங்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வியாதிக்கு சிக்கிய இளம் வயது நோயாளி தமது மகளா என்பது தொடர்பில் மருத்துவமனையின் பதிலுக்காக ஹன்னா பெய்ன் தற்போது காத்திருக்கிறார்.

ஆக்சிஜன் செலுத்தப்பட்டு, முகக்கவசம் அணிவித்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது குழந்தை ஈவ்லின் இருப்பதாக கூறும் அதன் தாயார்,

இன்று கண்டிப்பாக முடிவு தெரியவரும் என பயம் விட்டுமாறாமல் தெரிவித்துள்ளார். பிரித்தானியர்கள் கண்டிப்பாக கொரோனா தொற்றை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும்,

அரசின் ஆலோசனைகளை மதிக்க வேண்டும் எனவும் ஹன்னா ஏற்கெனவே தமது பேஸ்புக் பக்கம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.