உடல் வறட்சியை போக்கும் வெண்ணெய்.!

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க இரவில் வெண்ணையை சிறிதளவு உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

பனி காலங்களில் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் வரலாம். இந்த பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வெண்ணெயை பயன்படுத்தி எளிமையான தீர்வு காணலாம்.

வெண்ணெயை எடுத்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். இது பிரகாசமான முகத்தோற்றத்தினை கொடுக்கும்.

ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன், 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் இருப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் அற்புத காட்சியளிப்பதை தவிர்க்க இயலாது.