நடிகை நமீதாவிடம் தகாத வேலை செய்த நபர்.!

பிரபலமாக இருக்கும் நடிகைகளில் இருந்து திரைக்கு அறிமுகமாகும் நடிகைகள் வரை சமூக வலைத்தளங்களில் தங்களுக்கான அக்கவுண்ட்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.

இவர்களின் சமூக வலைதள பக்கத்திற்கு செல்லும் ரசிகர்கள் இவர்களின் புகைப்படத்திற்கு கருத்துக்கள் தெரிவித்து வருவார்கள். மேலும், இவர்களை ஆபாசமாக வசைபாடவும் ஒருகூட்டம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை நமீதா. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செந்தமிழ் என்ற பெயருடைய நபர் ஆபாச குறுந்தகவலை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த நமீதா, இது வேலைக்கு ஆகாது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.