இந்த நடிகைக்கு எய்ட்ஸ் இருக்கிறதா ??

தென்னிந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலரது மறுபுறத்தை காண்பித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், பலர் மீது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதனால் திரையுலகமே கதிகலங்கியிருந்த நிலையில், அடுத்ததாக யாரை? குறிவைக்க போகிறார் என்ற பயத்திலேயே திரையுலகம் இருந்தது. தற்போது துணை நடிகர் ஒருவர் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீரெட்டி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தெலுங்கு பட துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளம் தன்னைப்பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதூறுகளையும் மிகவும் கீழ்த்தரமான வதந்திகளையும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்ததாக கூறினார். இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீ ரெட்டி நடிகை கல்யாணி, ராகேஷிற்கும் எய்ட்ஸ் இருக்கிறது என பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.