முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த ரியோ பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சரவணன் மீனாட்சி தொடரில் நாயகனாக நடித்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்.
தற்போது ‘பானா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரியோவின் மனைவி ஸ்ருதி கர்ப்பமாக இருந்து வந்தநிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரியோ பதிவில், “தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலம்” என குறிப்பிட்டுள்ளார். ரியோவின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.







