கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபா் இடமாற்றத்தில் ஆளுங்கட்சி அரசியல்வாதி ஒருவா் தலையிட் ட காரணத்தால் இடமாற்ற நடவடிக்கை இடைநடுவில் விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கற்றல், கற்பித்தல் பணிகள் தடைப்படும் அபாயம் எழுந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள 12 கல்வி வலயத்திலும் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றத்தின் கீழ் கிளிநொச்சியில் 17 அதிபர்கள் அவர்களது இணக்கத்துடன் இடமாற்றம் செய் யப்பட்டிருந்த நிலையில் 11 வலயங்களில் இடம்பெற்ற இடமாற்றத்தை
அரசியல்வாதி ஒருவா் தடுத்து நிறுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இது தொடர்பில் இடமாற்றப்பட்ட அதிபர்கள் தெரிவிக்கையில், குறித்த அரசியல்வாதியின் செல்வாக்குள்ள சர்ச்சைக்குரிய ஒரு அதிபர் தற்போது தரம் 3 ல் உள்ளதாக குறிப்பிட்ட அவர்கள் , அவரை 1 ஏ.பி பாடசாலைக்கு நியமிக்கும் நோக்கிலேயே இதனைத் தடுப்பதாக கூறியுள்ளனர்.
குறித்த அதிபர் ஏற்கனவே இதே பாடசாலையில் இருந்த சமயம் பல மோசடிகள் , தவறான நடத்தைகள் காரணமாக கட்டாய இடமாற்றத்திற்கு உட்பட்டவர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கூறுகையில் , எமது வலயத்தில் இடமாற்றப்பட்ட 17 அதிபர்களும் விரும்பிய பாடசாலைகள் அவர்களின் தரத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது எனவும் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் எந்தவொரு காரணமும் தெரிவிக்காது இடமாற்றத்தை நிறுத்துமாறு செயலாளர் கூறிய நிலையில் நிர்வாக ரீதியில் இடமாற்றம் நிறுத்தப்பட்டதாகவும் இவ்வாறு நிறுத்தப்பட்டதனால் பாரிய நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் அதிபர்கள் கூறும் குற்றச் சாட்டுத் தொடர்பில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் , கிளிநொச்சி வலயத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட பட்டியலில் மாறுபாடு உள்ளதாக சுட்டிக் காட்டியமையினாலேயே அது இடைநிறுத்தப்பட்டதாகவும் இருப்பினும் இடமாற்றப்பட்ட அதிபர்கள் இடையே முரண்பாடு இல்லையேல் அதனை அவர்களுக்கு வழங்கலாம் எனவும் கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







