தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி பிரபலனவர் தான் அர்ச்சனா. அந்த வகையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அர்ச்சனாவுடன் சேர்ந்து அவரின் மகளும் தொகுத்து வழங்கினார்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் தொகுத்து பாடும் என்று கூறுவது உண்மை தான்.12 வயதில் அர்ச்சனாவின் மகள் தொகுப்பாளினியாக களத்தில் இறங்கியது பலருக்கு வியப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அர்ச்சனா மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை அர்ச்சனவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







