ஆண்ட்ரியா நடிகையாக வலம் வருவது மட்டுமில்லமல் பாடகர், மாடல் என பல திறமைகளைக் கொண்டவர். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அனாலும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களையும் அவர் மறுத்து வருது குறிப்பிடத்தக்கது.

திரையில் அதிகம் தோன்றவிட்டாலும் ரசிகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களையே இதுவரை ஏற்று நடித்துவந்தார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடித்தது தான் செய்த தவறு என கூறியுள்ளார்..

வடசென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் அமீருடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அந்த படத்தில் மேலாடை இல்லாமல் நடித்ததால் அவரை அணுகும் அனைத்து இயக்குநர்களும் அதே போல் நடிக்க எதிர்பார்க்கின்றனர் என ஆண்ட்ரியா
கூறியுள்ளார். எனவே வடசென்னை படத்தில் மேலாடை இல்லாத காட்சிகளில் நடித்தது இப்போது தவறு என்று உணர்கிறேன் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







