துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பிறகு சினிமா பக்கம் தலைகாட்டவில்லை.
இதையடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் ஷெரின். பிக் பாஸ் வீட்டின் உள்ள அனைத்து போட்டியாளர்களுடனும் பரஸ்பர உறவை வைத்திருந்த ஷெரினை சக போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் ஹாசனும் கூட வியந்து பாராட்டினார்.
அந்த அளவிற்கு நேர்மையாக அதே சமயம் யாரையும் காயப்படுத்தாமல் போட்டியை கையாண்ட ஷெரின் தான் பிக்பாஸ் 3-வது சீஸனின் பலரது பேவரைட் போட்டியாளர்.
பிக் பாஸ் போட்டி முடிந்த நிலையில் ஷெரின் மாடலிங், DJ என படுபிஸியாக உள்ளார், ஷெரின் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியள்ளதால் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில், படுக்கையில் தனது தோழியுடன் கோக்குமாக்காக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நீங்களே அதை பாருங்க..







