இரண்டு பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காவல் அதிகாரி…..

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கருங்காலிப்பட்டை பகுதியை சார்ந்தவர் சரத்குமார் (வயது 28). இவர் விழுப்புரம் இரயில்வே காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் மீது அங்குள்ள கானை பகுதியை சார்ந்த ராஜலட்சுமி (வயது 26) என்ற பெண்மணி புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில், காவல் அதிகாரியான சரத்குமார் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், இவருடன் பணியாற்றி வந்த பெண் காவல் அதிகாரி பிரியங்கா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ராஜலட்சுமி புகார் அளித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணமும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், இதே போல புகாரை பிரியங்கா என்ற பெண்மணி அளித்துள்ளார்.

பிரியங்கா கொடுத்த புகாரில், சரத்குமாரும் – நானும் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தோம். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் பின்னாளில் காதலாக மாறியது. இதனையடுத்து நாங்கள் காதலித்து வந்த நிலையில், ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் நான் கர்ப்பமானேன். இதனை சரத்குமாரிடம் தெரிவித்தேன்.

மொத்தமாக சுமார் நான்கு முறை சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரால் கருக்கலைப்பு செய்துள்ளேன். இப்போது நான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், என்னை ஏமாற்றி ராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்து கொண்டு, அவரது இல்லத்திற்கு சென்று தட்டிக்கேட்ட நிலையில், இவரின் உறவினர் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கீதா போன்றோர் அவதூறாக பேசி அடித்து வெளியே அனுப்பினர்.

இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் சரத்குமார், கீதாவின் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், சரத்குமாரை பணியிடைநீக்கம் செய்து திருச்சி இரயில்வே கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.