தலையில் அரிப்பு பிரச்சனையா ?

முன்னோர்கள் கைவைத்தியத்தில் காய்ச்சலுக்கான அனைத்து மருந்திலும் இஞ்சியின் பங்கு இருக்கும். இது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஆதி காலத்தில் இருந்தே இஞ்சியை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தார்கள்.

இஞ்சியை ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி சிறு பொடியாக நறுக்கி அதை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து சாறை வடிகட்டி அதிக அளவு தண்ணீர் விட வேண்டாம். சாறு கெட்டியாக வந்ததும் அதனுடன் சம அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து காட்டனில் சாறை நனைத்து தலையில் ஸ்கால்ப் பகுதியில் படும்படி மசாஜ் செய்யுங்கள். பிறகு மறுநாள் காலை தலைக்கு குளித்துவிடுங்கள். தலையில் இருக்கும் பொடுகு, அரிப்பு போன்றவை விரைவில் குணமடையும்.

இஞ்சி சாறுடன் சம அளவு கற்றாழை சாறு சேர்த்து கூந்தலின் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவுங்கள். நன்றாக ஒரு மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.பிறகு தலைக்கு குளித்துவிடுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்துவந்தால் நான்கு முறை இப்படி பயன்படுத்திய பிறகு முடி வறட்சி படிப்படியாக நீங்கும். முடி மென்மையாக இருக்கும்.

இஞ்சியை பேஸ்ட் போல் அரைத்து உடன் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போல் குழைத்து தலையில் அரிப்பு இருக்கும் இடங்கள். செதில் செதிலாக உதிரும் பகுதியில் தேய்க்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இதை வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் அரிப்பு குணமாகும்.

நரை முடி பிரச்சனை இருப்பவர்கள் வெங்காய சாறு போடுவதுண்டு. இவர்கள் வெங்காய சாறுடன் சம அளவு இஞ்சி சாறு கலந்து தேய்த்தால் முடியின் கருமையோடு வளர்ச்சியும் அதிகரிக்கும்.

குறிப்பு

இஞ்சி சாறை தலைக்கு பயன்படுத்தும் போது அதிகப்படியான எரிச்சலை உணர்ந்தால் இஞ்சியுடன் சம அளவு தயிர் கலந்து விடுங்கள்.