டிக்டாக்கிற்கு அடிமையாவதை தடுக்க புதிய வசதி…!!

டிக் டாக் எனப்படும் வீடியோ செயலியானது உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை உலகளாவிய ரீதியில் சுமார் 104.7 மில்லியன் தடவைகள் இந்த அப்பிளிக்கேஷன் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் மாத்திரம் 34.4 சதவீதமான பங்களிக்கு காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனிற்கு பலர் அடிமையாகவும் இருக்கின்றார்கள்.

இதனால் பல்வேறு பிரச்சினைகள் டிக் டாக் தொடர்பில் எழுந்துள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் பயனர்கள் டிக் டாக்கிற்கு அடிமையாவதை தடுக்க புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவற்றில் ஒன்று Screen Time Management ஆகும்.

அதாவது பெற்றோர்கள் தமது பிள்கைள் டிக் டாக் செயலியை பயன்படுத்தும் நேரத்தினை இவ் வசதி மூலம் வரையறுக்க முடியும்.

அடுத்தது Direct Message வசதியாகும்.

பெற்றோர்கள் நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பி தமது பிள்ளைகளை கட்டுப்படுத்தும் வசதியை இது தருகின்றது.

மூன்றாவது Restricted Mode வசதி.

இதன் மூலம் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒவ்வாதது எனக் கருதும் வீடியோக்களை பெற்றோர்கள் தடை செய்யக்கூடிய வசதி இதுவாகும்.