பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி எனும் தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானாவர்கள் நடிகர் கார்த்திக் சன்ஞிவ் மற்றும் அல்யா மானசா. பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக நடிகர் சன்ஞிவ் அறிவித்தார்.
மேலும், தற்போது இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி தொடரில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரின் சமுகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது மனைவி அல்யா மானசா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “நீங்கள் தான் என்னோட வாழ்க்கை” என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.