நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிஸியான இயக்குநர்களில் ஒருவர். தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார் அவர். சுருளி, கர்ணன், Atrangi Re, கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார் அவர்.
மேலும் பா.பாண்டி இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. அதில் கவுண்டமணியை ஹீரோவாக நடிக்கவைக்க தனுஷ் முயற்சித்து வருகிறார் என்றும் செய்திகள் வந்தது. அதுமட்டுமின்றி ரஜினியின் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து அதில் நடிக்க விருப்பம் என தனுஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அது பற்றி தற்போது பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வருகிறது. இது பற்றி நெற்றிக்கண் படத்தின் கதாசிரியர் நடிகர் விசு அளித்துள்ள பேட்டியில், “நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்றால் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என கூறியுள்ளார்.







