பறக்கும் விமானத்தை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்..?

விமானப் பயணம்தான் ஆபத்தான பயணங்களில் மிக முக்கியமானது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதே தெரியாது. சின்ன அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட பெரிய அளவில் சேதங்களும், பாதிப்புகளும் ஏற்பட கூடும். இந்த நிலையில் நடுவானில் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டு இருந்த பொழுது அந்த விமானத்தில் திடீரென மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஐரோப்பாவில் புயல் தாக்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிரித்தானியாவின் நகரமான பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து டப்ளினுக்கு சென்ற ஏர் லிங்கஸ் என்ற விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது மின்னல் திடீரென தாக்கி இருக்கின்றது .இந்த விமானம் தாக்கப்படும் காட்சியானது குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது.

மின்னல் தாக்கிய உடன் விமானம் என்ன ஆனது? பயணிகளின் நிலை என்ன ஆனது என்பது குறித்து கேள்விகள் எழுந்தது. இதற்கு விமான நிறுவனம் பதிலளித்து இருக்கின்றது. அதில், பொதுவாக இடி, மின்னல் போன்றவற்றை தாங்கும் வகையில் தான் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்றும், எனவே விமானம் இதனால் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாது. என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.