சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட இலங்கை தர்ஷன்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஈழத்து தர்ஷன் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.

கடந்த சில வாரங்களாக சனம் மற்றும் தர்ஷனின் காதல் குறித்த செய்திகள் இணையத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது.

நடிகை சனத்தை நிச்சயம் செய்து விட்டு தர்ஷன் பின்னர் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இது குறித்த வழக்குகளும் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும் என்று வழமை போல தர்ஷன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். குறித்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.