மர்மமான முறையில் இரத்தமாக மாறிய கடல்..! பயந்து நடுங்கும் உள்ளுர்வாசிகள்

கஜகஸ்தானில் இரத்த சிவப்பு நிறத்தில் கடல் மாறியதால் உள்ளுர்வாசிகள் அதிரச்சியடைந்துள்ளனர்.

தென்கிழக்கு கஜகஸ்தானில் உள்ள அக்தாவ் நகரத்தால் காஸ்பியன் ரிவியராவிலே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பமுடியாத புகைப்படங்களில் கடற்கரை பெரிய இரத்தக் கறைகளைப் போல அடர்ந்த பனியில் சிவப்பு நிறமாக மாறி இருப்பதை காட்டுகின்றன.

கடலின் தோற்றம் மாறி இருந்தாலும் நீர் மாசுபடவில்லை என உள்ளுர் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்

கடலின் நிறம் மாறுவதற்கான காரணம் டயட்டோம்ஸ் எனப்படும் சிறப்பு வகை ஆல்கா ஆகும் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆல்கா என்பது இலைகள் அல்லது வேர்கள் இல்லாமல் பொதுவாக தண்ணீரில் அல்லது அதற்கு அருகில் வளரும் சாதாரண சிறிய தாவரங்கள் ஆகும்.

ஆல்காவின் தோற்றம் பயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தாலும், அதனுடன் தொடர்பு கொள்ளும் மீன் அல்லது மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட பிறகும், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளை பரப்பி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.