இந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”.
எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நாடாகும் கதைக்களமாக உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார்.
500 நபர்கள் மற்றும் 200 நடனக்கலைஞர்கள் கொண்டு அந்நாட்டின் மிகவும் பிஸியான வார்ட்போர்டு பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. நடிகை ஸ்ரேயா மிகவும் திறமைவாய்ந்த பெல்லி டான்சர். இவர் மீண்டும் கவர்ச்சி டான்ஸ் ஆடவந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.







