தெலுங்கு சினிமாவில் தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த். இவர் மெகா ஹிட்டான கார்த்திகேயா 2 படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.
இதற்கு நடுவில் தனது வருங்கால துணையை தேர்வு செய்துள்ளார் நிகில்.
டாக்டர் பல்லவி வர்மாகை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார், அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இருவரின் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.