பச்சை, பச்சையாக பேசிய நடிகை நித்யா மேனன்…

நடிகை நித்யா மேனன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சைக்கோ. உதயநிதி கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் நித்யா மேனன் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய இந்த மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த படத்தில் வருகின்ற சில காட்சிகளில், நடிகை நித்யா மேனன் கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசி நடித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நித்யா மேனன் இப்படி பேசியுள்ளாரா? என்று ஷாக் ஆகித்தான் இருந்தார்கள்.

இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகை நித்யா மேனன் ” படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மிஷ்கின் இந்த வார்த்தைகளை கூறும் போது எனக்கு புதுமையான் வார்த்தைகளாக இருந்தது. ஏனென்றால், அந்த வார்த்தைகளை நான் முன்பு கேள்விப்பட்டதும் கிடையாது, பேசியதும் கிடையாது. அதற்கு என்ன அர்த்தமும் என்று கூட தெரியாது” என்று அவரிடம் கூறினேன்.

இதனை கேட்ட மிஷ்கின், “ஓ.. அர்த்தம் தெரியாதா..? அப்போ பேசிவிடு” என்று மிஷ்கின் கூறியதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்திருந்தார்.