இளநரையை எளிய முறையில் விரட்டணுமா?

இன்றைய காலக்கட்டத்தில் மாசடைந்த சூழல் பலருக்கு இளம் வளதிலேயே இளநரை பிரச்சனையை உண்டாக்கிவிடுகிறது. இது ஒருவரது அழகை கெடுத்து விடுகின்றது.

வைட்டமின் பி12 பற்றாக்குறை அல்லது இரும்புச்சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

மேலும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், புரதம், காப்பர் மற்றும் இன்ன பிற முக்கிய வைட்டமின்கள் போன்றவற்றின் குறைபாடு காரணமாக கூட இளநரை ஏற்படக்கூடும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்பாம்.

நெல்லிக்காய்
முதலில் நெல்லிக்காய் பவுடரை எடுத்துக் கொள்ளவும். சிறிது வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த 2 பவுடரையும் நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பு இதனை கூந்தலில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலை எழுந்ததும் மிதமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவிடவும்.

கறிவேப்பிலை
சிறிது தேங்காயில், சில கறிவேப்பிலைகளை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் சேர்க்கப்பட்ட இலைகள் கருப்பு நிறத்திற்கு மாறும் வரை கொதிக்க விடவும்.

பின்பு, அந்த எண்ணெயை ஆற வைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். தயார் செய்த இந்த எண்ணெயை, தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை எழுந்து, மிதமான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளித்திடவும்.

ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் முன்பு, முதல் நாள் இரவே இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து மறுநாள் குளிக்க வேண்டும்.

ப்ளாக் டீ
ஒரு டம்ளர் தண்ணீரில், 3 டேபிள் ஸ்பூன் ப்ளாக் டீ இலைகளை சேர்க்கவும். அத்துடன், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

ஒரு டம்ளர் தண்ணீர், பாதி டம்ளராக குறையும் வரை கொதிக்க விடவும். பின்னர், அதனை வடிகட்டி ஆற வைக்கவும்.

தயார் செய்து வைத்துள்ள இந்த கலவையை, தலைக்கு குளித்த பின்பு, முடியில் தேய்க்கவும்.

பாதாம் எண்ணெய்
2:3 என்ற விகிதக் கணக்கல் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும்.

முடியில் வேர்க்கால்களில் படும்படி இந்த கலவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலவி விடலாம்.

காபி தூள்
2-3 கப் தண்ணீரில் சிறிது காபி தூளை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், அந்த கலவையை ஆற விடவும். அத்துடன் ஹென்னா பவுடர், அதாவது மருதாணி பவுடரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை சில மணி நேரங்களுக்கு ஊற விடவும். பின்னர், அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய்/பாதாம் எண்ணெய்/தேங்காய் எண்ணெய்/கடுகு எண்ணெய் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்து முடியில் தடவவும்.

ஒரு மணி நேரம் கழித்து, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி அலசிடலாம். இந்த கலவை இளநரையை குறைப்பதோடு, மிருதுவான கூந்தலை பெற உதவும்.