தனுஷால்…. நடிகை அமலாபாலுக்கு நேர்ந்த கொடுமை!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை அமலாபால் இவர் மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அறிமுகமான சில வருடங்களிலேயே நடிகர் விஜயுடன் தலைவி படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தலைவா திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார். தலைவா திரைப்படத்துக்கு முன்பே இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர்.

தலைவா திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகியோர் காதலித்தனர், பின்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து இரண்டே வருடத்தில் நடிகை அமலா பால் மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோர் விவாகரத்து செய்தனர். ஏன் இயக்குனர் ஏ எல் விஜய் நடிகை அமலாபால் விவாகரத்து செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அமலா பால் மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோரின் விவாகரத்து நடைபெற்றபோது நடிகர் தனுஷ் தான் இதற்கு காரணம் என வதந்திகள் பரவின..

தற்போது இது குறித்து பேசியுள்ளார் தயாரிப்பாளரும் ,இயக்குனர் ஏ எல் விஜயின் அப்பாவுமான ஏ எல் அழகப்பன் ” நடிகை அமலா பால் மற்றும் இயக்குனர் விஜயின் விவாகரத்திற்கு காரணம் நடிகர் தனுஷ்தான், நடிகை அமலாபால் திருமணத்தின் போது கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டார். அதாவது ஏவல் விஜய் மற்றும் அமலாபால் திருமணத்திற்கு பின் அமலாபால் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என உறுதி அளித்திருந்தார். ஆனால் அமலா பால் திருமணத்திற்கு பின் தனுஷின் அம்மா கணக்கு திரை படத்தில் நடிப்பதற்காக ஏ எல் விஜயிடம் சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்தை பெற்றுக்கொண்டார்” என்று பேசியுள்ளார்..