கோரத்தாண்டவமாடும் கொரோனா வைரஸின் புகைப்படத்தினை வெளியிட்ட சீனா!

கோரத்தாண்டவமாடும் கொரோனா வைரஸின் புகைப்படத்தினை சீன மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளியான தகவலினால் இலங்கையர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். Face mask இல்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முன்தினம் முதன்முதலாக வெளியிட்டுள்ளனர்.

வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 6-ம் திகதி ஒரு நோயாளியிடமிருந்து, `என்.பி.ஆர்.சி 2020.00001′ என்ற வரிசை எண்ணுடன் இந்த வைரஸ் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய படம்தான் கொரோனா வைரஸ்க்கான முதல் மாதிரிப் படம். பின்னர், ஜனவரி 22-ம் தேதி என்.பி.ஆர்.சி 2020.00002 என்ற எண்ணுடன் மற்றொரு நோயாளியிடமிருந்து பிரித்தெடுத்துள்ளனர்.

இரண்டாவது நுண்ணிய படத்தையே அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸைத் தடுப்பது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் பெய்ஜிங்கிற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் வுஹான் பகுதியைச் சேர்ந்த மக்களை வெளியேற்றவும் அந்நாட்டு அரசுகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட, சுமார் 1 லட்சம் மக்கள் ஏற்கெனவே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.