கோடி பணமிருந்தும் இருந்தும் நடுத்தெருவில் அனாதையாக முதியவர்… அடித்து கொடுமைப்படுத்திய மகன், மருமகள்

சமீபகாலமாக சொத்துக்கு ஆசைப்பட்டு வயதான பெற்றோரை பெற்ற பிள்ளைகளே அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் சம்பவங்கள் ஆங்காகே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சேலத்தை அடுத்த ஆர்.கே. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி. இவருக்கு பச்சமுத்து என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

பச்சமுத்துவுக்கு சுமார் 1 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. பிள்ளைகள் அனைவர்க்கும் நல்ல முறையில் திருமணம் செய்துவந்த ராமசாமி மகன் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமியின் அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி மகன் மற்றும் மருமகள் இருவரும் அவரை அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து மகள்களிடம் கூறிய போது அவர்களும் அப்பாவுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன், மக்கள் நீதிமன்றத்தை நாடிய போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த 80 வயதான அந்த முதியவர், சொத்து பத்திரங்களை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் எடுத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அங்கிருந்த ஒரு பேருந்து நிலையத்தில் தங்கி பசியோடு இருந்து வந்துள்ளார்.

இதையறிந்த சிலர் அவருக்கு உணவு கொடுத்து உதவியுள்ளனர். மேலும் தனியார் ஆதரவற்றோர் அமைப்பிடம் ராமசாமி பத்திரமாகச் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.