கனா காணும் காலங்கள் பிரபலத்திற்கு பிக் பாஸ் சேரன் கொடுத்த சர்ப்ரைஸ்!

கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த இர்பானுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பினை சேரன் வழங்கியுள்ளார்.

சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜாவுக்கு செக். இதில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். ஹீரோ போல நடித்து வந்த இர்ஃபான் தற்போது வில்லனாக மாறியுள்ளது பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டும் அல்ல, பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இர்பானுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.

இந்த படத்தை பார்த்தவர்கள் டுவிட்டரில் நடிகர் இரபானுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதோடு நடிகர் இர்பானை வாழ்த்து மழையில் நனைய வைத்து உள்ளார்கள். இந்த படத்தில் இர்பான் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது என்றும் கூறி இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல வாய்ப்பு கொடுத்த சேரனுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.