ஒருவரை விமர்சிக்கும்போது நாகரீக எல்லையை மீறக்கூடாது- ஆத்மிகா

ஒருவரை விமர்சிப்பது தவறல்ல. ஆனால் நாகரீக எல்லையை மீறக்கூடாதென நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

மீசைய முறுக்கு படத்தின் ஊடாக திரையுலகில் நுழைந்த நடிகை ஆத்மிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில், இவரது தோற்றத்தைக் கிண்டல் அடித்து, சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே ஆத்மிகா, ”விமர்சனம் தவறல்ல. நாகரீக எல்லையை மீறாமல் நடந்துக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.