தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், ஏற்கனவே தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் இன்று வரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். ஏற்கனவே நடிகர் சிம்பு காதலித்து, பிரிந்து நிலையில் தற்போது அவர் திருமணத்தை பற்றி பேசியுள்ளார்.
அதில், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் நானும் ஒரு குழந்தைதான். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும். அதன் பின் தான் திருமணம் என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போது படவாய்ப்புகள் இல்லாத ஹன்சிகா தற்போது சிலம்பரசனுடன் மஹா திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் இருந்த நிலையில் தற்போது, இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதால் கண்டிப்பாக ஏதேனும் கிசுகிசுக்களை எதிர்பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.