திருகோணமலை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை தேடிய தந்தையொருவரும் உயிரிழப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளையை தேடி வந்த திருகோணமலையை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய பிள்ளையை காணாமலேயே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பாலையூற்றை சேர்ந்த 74 வயதான சின்னையா சச்சிதானந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணாமல்போன தனது மகனை கடந்த 11 வருடங்களாக தேடி வந்த நிலையில் குறித்த தந்தை கடந்த திங்கட்கிழமை நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வசித்து வந்த சின்னையா கண்ணம்மா எனும் தாயார் 10 ஆண்டுகளாகியும் காணம்ல் ஆக்கப்பட்ட தனது மகன் வருவார் என்ற நம்பிக்கையில் போராட்டங்களிலும் விசாரணைகளிலும் கலந்து கொண்டு தனது மகனை தேடி வந்தார்.

அவரது கணவர் இறந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில் நேற்று முன் தினம் குறித்த தாயார் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை இதுவரை காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடி 50 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய பிள்ளைகளை காணாமலேயே உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.