பல சர்ச்சைகளுக்கு பின்பு காதலியை திருமணம் செய்யும் மஹத்…!!

பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய மஹத் தனது காதலி பிராச்சி மிஸ்ராவை அடுத்த மாதம் முதல்வாரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்த மஹத்திற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பின்பு சிம்புவின் நண்பராக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்தார்.

பின்பு ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த வருடங்களாக மிஸ் இந்தியா அழகி பட்டத்தினை வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்தார். பின்பு யாஷிகாவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் மஹத் நடந்துகொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இவர்களின் காதலில் சற்று விரிசலை ஏற்படுத்தியது.

பின்பு சமாதானமாகி காதலைத் தொடர்ந்த மஹத் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்தார். தற்போது இவர்களது திருமணம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.