பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவருக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகெங்கிலும் தற்போது ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இதனால் இவர் எங்கு சென்றாலும் அவருடன் சேர்ந்து செல்பி எடுப்பதற்காகவே ஒரு கூட்டம் கூடிக்கொண்டு வருகின்றது.
பொங்கல் திருவிழாவினை வித்தியாசமாக கொண்டாடிய லொஸ்லியா தற்போது பொள்ளாச்சியில் இருக்கின்றார். அங்கு ஹாட் பலூனில் அவர் பறந்த காட்சியினை நாம் அவதானித்த இத்தருணத்தில், ஒரு இளைஞர் படையுடனே லொஸ்லியா செல்பி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.







